By March 3, 20200 CommentsReport

ஜாலி டீமுடன் ப்ரியா பவானி ஷங்கர்…!!

ஹரிஷ் கல்யாண் உடன் ஜோடி சேர்ந்து ப்ரியா பவானி ஷங்கர் நடித்து வந்த அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.

செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை நடிகையாக மாறி தற்போது பெரிய திரையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ப்ரியா பவானி ஷங்கர். முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் அவரது நடிப்பில் மாஃபியா திரைப்படம் சமீபத்தில் வெளியானது. மென்மையான கதாபாத்திரங்களில் இருந்து அதிரடியான ஆக் ஷன் காட்சிகளில் அவர் நடித்திருப்பது பலராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக புதிய திரைப்படம் ஒன்றில் ப்ரியா பவானி ஷங்கர் நடித்து வந்தார். ‘பெல்லி சூப்புலு’ தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆக உருவாகிவரும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 2016-ஆம் ஆண்டு நடிகர் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் ‘பெல்லி சூப்புலு’. இந்தத் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு குறித்து ப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில் “மிகவும் ஜாலியான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அழகான தருணங்களையும் அன்பையும் பகிர்ந்த உங்கள் அனைவரையும் நான் மிஸ் செய்வேன். இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். உங்கள் அனைவரையும் விரைவில் மீண்டும் சந்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ப்ரியா பவானி ஷங்கர் தற்போது எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் பொம்மை, குருதி ஆட்டம், வான் போன்ற பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*