யாரு அம்மன் வேடம் போடனும்கிற வெவஸ்தை இல்ல – கிண்டலடித்தவருக்கு ஆர். ஜே பாலாஜி பதிலடி!
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா அம்மன் அவதாரமெடுத்து மூக்குத்தி அம்மன் படத்தில் என்ற படத்தில் நடித்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தை தயாரித்துள்ளது.
வெறும் 50 நாட்களில் நாகர்கோவிலில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடத்தி முடித்தனர்.
இதனை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அம்மன் தோற்றத்தில் கையில் வேல் ஏந்தி இருந்த நயன்தாராவை பார்த்து அவரது ரசிகர்களே கும்பிடு போட்டனர்.