By March 5, 20200 CommentsReport

தணிக்கை செய்யப்பட்ட ஜிப்ஸி படக் காட்சிகள் இணையத்தில் வெளியீடு..!!!

குக்கூ, ஜோக்கர் படங்களுக்குப் பிறகு இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ள படம் – ஜிப்ஸி.

ஜீவா, நடாஷா சிங் நடித்துள்ள இப்படத்துக்கு இசை – சந்தோஷ் நாராயணன்.

தணிக்கையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு பலமுறை தள்ளிப் போனது. கடைசியில், ஜிப்ஸி படம் மார்ச் 6-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தணிக்கையால் வெட்டப்பட்ட காட்சிகளின் விடியோக்களைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் படத்துக்குக் கூடுதல் விளம்பரங்கள் கிடைத்துள்ளன.


Post a Comment

CAPTCHA
Refresh

*