By March 6, 20200 CommentsReport

இசை வெளியீட்டு விழாவை அடுத்து டீசர்: பரபரப்பாகும் மாஸ்டர்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15ஆம் தேதி லீலா பேலஸ் என்ற ஸ்டார் ஹோட்டலில் நடைபெறவிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த தகவலும் வெளிவந்துள்ளது
‘மாஸ்டர்’ படத்தின் டீசர் வரும் 22ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தற்போது டீசர் எடிட்டிங் பணி நடைபெற்று வருவதாகவும் விரைவில் சென்சார் பெற்றவுடன் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

டீசரை அடுத்து ரிலீஸ் தேதியான ஏப்ரல் 9ஆம் தேதிக்கு முன் டிரைலரையும் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே ‘மாஸ்டர்’ படத்தின் ஆடியோ விழாவில் விஜய்யின் பேச்சு மாஸ் ஆக இருக்கும் என்றும் குறிப்பாக உச்ச நடிகர் ஒருவரை தாக்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*