By March 6, 20200 CommentsReport

கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தா.. புகைப்படத்தை பார்த்து மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகை சம்ந்தா என்றால் அவரை பிடிக்காத ரசிகர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவரின் அழகையும், புன்னகைக்கும் ரசிகர்கள் ஏராளம்.

இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து கொண்டும் சமூக வலைத்தளங்களில் பல கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிடுவதுமே வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், இவர் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தது. ”காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தில் இருந்து சமந்தா திடீரென விலகிவிட்டதாக கூறப்படுகிறது சமந்தா தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அதன் காரணமாக இந்த படத்தில் இருந்து விலக முடிவு செய்து இருப்பதாகவும், அது மட்டுமின்றி இன்னும் ஓரிரு வருடங்களுக்கு அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

இதனால், ரசிகர்களுக்கு சமந்தா ரசிகர்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சியாய் இருந்தாலும் இன்னொரு பக்கம் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா நடிக்க வேண்டிய நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை பெற்று வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*