By March 7, 20200 CommentsReport

விஷால் தானாக ஒதுங்கிக் கொள்வது நல்லது: பாரதிராஜா எச்சரிக்கை…!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் ஜூன் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாரதிராஜா பேசியபோது விஷால் மீது பல்வேறு ஊழல் புகார்கள் இருப்பதால் அவர் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும், அவராகவே விலகிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:
vishalவிஷால் தானாக ஒதுங்கிக் கொள்வது நல்லது:தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் என்பது தேவை இல்லை. ஒற்றுமை இல்லாமல் அனைவரும் பல அணிகளாக பிரிந்து நிற்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். தலைவர் பதவிக்கு வருபவர்களுக்கு சேவை மனப்பான்மை இருக்க வேண்டும்.
ஆனால் பலதரப்பட்ட போட்டி வரும்போது சேவை மனப்பான்மை இருக்காது. ஆகவே தான் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களில் முக்கியமான சிலர் கூடிப் பேசி ஒரு நல்ல தலைவரை தேர்வு செய்யலாம் என நினைக்கிறோம்.

பதவிக்கு வரும் நபர்கள் தன்னுடைய அடையாளத்தை தொலைத்து விட்டு செயலாற்ற வேண்டும். தேர்தல் இல்லாமல் வயதில் மூத்த தயாரிப்பாளர்கள் சொல்வதை கேட்டு ஒத்துப் போகும் ஒருவர் தலைமை இடத்திற்கு வர வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். விஷால் மீது பல்வேறு ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளன.


Post a Comment

CAPTCHA
Refresh

*