By March 7, 20200 CommentsReport

மாஸ்டர் படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் “மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மாணவராக சாந்தனு பாக்யராஜும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

மேலும் ஆன்ட்ரியா, 96 புகழ் கௌரி கிஷன் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் முதல் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான குட்டி கதை சிங்கிள் பாடல் தற்போது வரை 28 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது வருகிறார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, ட்ரைலர் , டீஸருக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு சமீபத்திய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது,
இப்படத்தை அமெரிக்காவில் திரையிடும் வெளிநாட்டு உரிமையை ஹம்ஸினி என்டர்டெயின்மென்ட் மற்றும் திங்க் பிக் பிக்சர் நிறுவனம் இணைந்து கைப்பற்றியுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*