ஆர்யாவுடன் அலப்பறை செய்யும் ” டெடி ” படத்தின் டீசர் இதோ..!
சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘டெடி’ படத்தின் “டீசர்” வெளியாகியுள்ளது.
சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஆர்யா சாயிஷா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் ’டெடி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் விறு விறுப்பான “டீசர்” வீடியோ சற்றுமுன் யூடியூபில் வெளியாகியுள்ளது.
சதீஷ், கருணாகரன், மசூம் ஷங்கர், இயக்குநர் மகிழ் திருமேனி, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. டி.இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்றது.படம் வருகிற 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்ப்ர்க்கப்படுகிறது.