By March 12, 20200 CommentsReport

தேவதையாக இருக்கும் மனைவியுடன் ஆர்யா… தீயாய் பரவும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் தான் நடிகர் ஆர்யா. இவர் நடிகை சாயிஷாவை கடந்த மார்ச் மாதம் 10ம் திகதி திருமணம் செய்து கொண்டார்.

வனமகன் 10 மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா. இவர், ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்திலும் நடித்துள்ளார்.இந்த படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்பு எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள பல பெண்கள் போட்டி போட்டது அனைவருக்கும் தெரிந்த விடயமே.

இருப்பினும் 38 வயதான ஆர்யா 21 வயதான சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்த சில மாதத்திலேயே திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் இருவரும் ஒன்றாக படத்திலும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தினத்தில் தனது முதல் திருமண நாளைக் கொண்டாடிய ஆர்யா தனது மனைவியுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படம் மற்றும் கேக் வெட்டிய காட்சியும் தீயும் பரவி வருகின்றது


Post a Comment

CAPTCHA
Refresh

*