இதற்காக தான் திரிஷா என் படத்திலிருந்து விலகினார் – சிரஞ்சீவி விளக்கம்..!!!
சிரஞ்சீவி அடுத்ததாக ஆச்சார்யா என்கிற கமர்சியல் படத்தில் நடிக்க உள்ளார். கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். திடீரென அவர் இப்படத்திலிருந்து விலகினார். கதையில் ஏற்கனவே சொன்ன தனது கதாபாத்திரத்தில் நிறைய மாற்றங்களை செய்ததால் தான் இதிலிருந்து விலகுவதாக திரிஷா விளக்கம் அளித்தார். அவருக்கு பதிலாக காஜல் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், ஆச்சார்யா படத்தில் இருந்து திரிஷா விலகியதன் உண்மை காரணத்தை சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திற்கு திரிஷா மொத்தமாக தனது கால்ஷீட்டை கொடுத்துவிட்டார். அதனால் அவர் ஆச்சார்யா படத்தில் நடிக்கவில்லை. மற்றபடி படக்குழுவினருடன் அவருக்கு எந்தவித மனக்கசப்பும் இல்லை என சிரஞ்சீவி கூறியுள்ளார்.