மருதநாயகத்தின் நிலை குறித்து மனம் திறந்த கமல்..!!

கமல்ஹாசன் கனவு படமான மருதநாயகம் படவேலைகள் 1997-ல் தொடங்கப்பட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டது. பட்ஜெட் மற்றும் சர்வதேச அளவிலான வினியோக சந்தை நிலவரம் உள்ளிட்ட சில காரணங்களால் படப்பிடிப்பை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மருதநாயகம் படத்தை அவரால் எடுக்க முடியவில்லை. இப்படத்தை இனி தொடங்கினாலும் அதில் தான் நடிக்கப்போவதில்லை என கமல் கடந்தாண்டு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியுடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் கமல் நேற்று கலந்துரையாடினார். அப்போது மருதநாயகம் படம் குறித்த கேள்வியை விஜய் சேதுபதி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், மருதநாயகத்தை புத்தகமாக வெளியிட வேண்டும் என்றால் உடனே வெளியிட்டு விடலாம். ஆனால் அதை படமாக எடுக்க பணம் வேண்டும். அந்த பணம் இருந்தால் உடனே உருவாகும். நான் உருவாக்க நினைத்த மருதநாயகம் 40 வயது கதாநாயகனுக்காக எழுதப்பட்டது. இப்போது என்னால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது. ஆகவே வேறு ஒரு நடிகரை அதில் நடிக்க வைக்க வேண்டும், இல்லையெனில் கதையையே மாற்ற வேண்டும் என்றார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*