சிரஞ்சீவி படத்திலிருந்து விலகினாரா காஜல்?..!!

சிரஞ்சீவி தனது கனவுப்படமான சைரா நரசிம்ம ரெட்டி படத்தை முடித்துவிட்டு ரசிகர்களுக்காக தற்போது ஆச்சார்யா என்கிற கமர்சியல் படத்தில் நடித்து வருகிறார். கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ள இருந்த நிலையில் திரிஷா திடீரென இந்த படத்திலிருந்து விலகினார்.

இதையடுத்து திரிஷாவுக்கு பதிலாக காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமானார். இதனிடையே தமிழ் படத்திற்காக அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்ததாகவும், இதனால் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் இருந்து காஜல் அகர்வாலும் விலகியதாக செய்திகள் பரவின. இந்நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள காஜல் தரப்பு, அவர் தமிழ் படத்திற்காக அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்தது உண்மைதான். இருப்பினும் அவர் சிரஞ்சீவியின் படத்தில் இருந்து விலகவில்லை. அதுபற்றிய செய்திகள் உண்மையில்லை என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது..


Post a Comment

CAPTCHA
Refresh

*