போனி கபூர் வீட்டில் நுழைந்த கொரோனா..!!

இந்திய திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர். இவர் மறைந்த நடிகர் ஸ்ரீதேவியின் கணவர். இவரது மகள் ஜான்வி கபூர் தற்போது இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டில் பணியாளராக இருந்துவரும் 23 வயதான சரண் சாஹு என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக போனி கபூர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“என் வீட்டில் பணியாளராக இருக்கும் சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நான், என் மகள்கள் வீட்டிலிருக்கும் மற்ற பணியாளர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறோம். யாருக்கும் எந்த அறிகுறிகளும் இல்லை. ஊரடங்கு ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து நாங்கள் யாரும் வீட்டை விட்டு நகரவில்லை.

மருத்துவக் குழு தந்துள்ள அறிவுறுத்தல்களை நாங்கள் கண்டிப்பாக பின்பற்றுவோம். சரண் விரைவில் குணமடைந்து எங்கள் வீட்டுக்குத் திரும்புவார் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்”

இவ்வாறு போனி கபூர் தெரிவித்துள்ளார்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து தமிழில் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்


Post a Comment

CAPTCHA
Refresh

*