கிரணிடம் பிகினி உடை அணிய சொல்லி 6 மாதமாக கேட்ட படக்குழுவினர்..!!

‘ஜெமினி’ படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண். தொடர்ந்து அஜித்துடன் ‘வில்லன்’, பிரஷாந்துடன் ‘வின்னர்’, கமல்ஹாசனுடன் ‘அன்பே சிவம்’, எஸ்ஜே சூர்யாவின் ‘நியூ’ உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக சுந்தர்.சி இயக்கத்தில் பிரசாந்த், வடிவேலுவுடன் அவர் நடித்த ‘வின்னர்’ படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றில் பிகினி உடை அணிந்தது குறித்து வீடியோவுடன் நினைவுகளை பகிர்ந்துள்ளார் கிரண்.

அதில், ”பிகினி உடையில் நான் முதலும் கடைசியுமாக நடித்த காட்சி. என்னை 2 பீஸ் உடையில் நடிப்பதற்காக 6 மாதமாக என்னிடம் கேட்டனர். ஆனால் அந்த உடை அணிவது குறித்து என்னிடம் நிறைய கேள்விகள் இருந்தது. படப்பிடிப்பின் போது உடல் எடை பிரச்சனையாக இருந்தது. ஆனால் அந்த பாடல் மிகப் பெரிய ஹிட்டானது என்று குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*