குருதி ஆட்டத்தை முடித்த பிரியா பவானி சங்கர்..!!

மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். இப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் கடைக்குட்டி சிங்கம் மான்ஸ்டர் படங்களில் நடித்தார்.

இந்நிலையில் தற்போது பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்து வரும் குருதி ஆட்டம் படத்தின் டப்பிங் பணிகளை முடித்து கொடுத்துள்ளார். 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஶ்ரீ கணேஷ் இயக்கி உள்ள இப்படத்தில் அதர்வா நாயகனாக நடித்து வருகிறார். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதையடுத்து, பிரியா பவானி சங்கர் குருதி ஆட்டம் படத்தின் டப்பிங்கை முடித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*