ரிலீசுக்கு முன்பே பிகில் பட சாதனையை முறியடித்த மாஸ்டர்..!!

நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும், விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போயுள்ளது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.15 கோடிக்கும் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்குமுன் விஜய் நடித்த பிகில் படத்தை அந்நிறுவனம் ரூ.14 கோடிக்கு வாங்கியதே சாதனையாக இருந்தது. தற்போது மாஸ்டர் படம் அதனை முறியடித்துள்ளது. மாஸ்டர் படம் தியேட்டரில் ரிலீசான பின்புதான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு திட்டவட்டமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*