தயாரிப்பாளர் தவறாக நடக்க முயன்றார் – நடிகை பரபரப்பு புகார்..!!

இந்தி சீரியல் நடிகை சிம்ரன் சச்தேவா. இவர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற சோட்டி சர்தார்னி தொடரில் நடித்து பிரபலமானார். இந்த தொடரில் ஏற்கனவே மான்சி சர்மா நடித்து வந்தார். அவருக்கு உடல்நலம் குன்றி தொடரில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக சிம்ரன் சச்தேவாவை நடிக்க வைத்தனர். இவர் ஏற்கனவே பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். கொரோனா ஊரடங்கினால் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் முடங்கி உள்ளன.

இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அதிக சம்பளம் வாங்கிய நடிகர் நடிகைகளை தொலைக்காட்சி தொடர்களில் இருந்து நீக்கி விட்டு அவர்களுக்கு பதிலாக குறைந்த சம்பளத்துக்கு சம்மதிப்பவர்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். இதுபோல் சிம்ரன் சச்தேவாவுக்கு 40 சதவிதம் சம்பளத்தை குறைத்துள்ளனர். இதனை ஏற்க மறுத்து தொடரில் இருந்து அவர் விலகி விட்டார்.

சிம்ரன் சச்தேவா

இது குறித்து சிம்ரன் சச்தேவா கூறும்போது, “தொடரில் நடிக்க ஏற்கனவே சம்பளத்தை ஒழுங்காக தரவில்லை. இப்போது 40 சதவீதம் சம்பளத்தை குறைக்கும்படி நிர்ப்பந்திக்கின்றனர். மேலும் தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் தகாத முறையில் தவறாக நடக்க முயன்றார். மரியாதை இல்லாமலும் நடத்தினார். இதனால் அந்த தொடரில் இருந்து விலகினேன்” என்றார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*