By November 2, 20200 CommentsReport

பிக்பாஸ் 4-ல் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?..!!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய இரண்டு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர்.

ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த வாரம் வெளியேற்றப்படுவோர் பட்டியலில் 11 பேர் இடம்பெற்று இருந்தனர். அவர்களில் 6 பேர் காப்பாற்றப்பட்டுவிட்டனர்.

வேல்முருகன்

மீதமுள்ள ஆஜித், வேல்முருகன், நிஷா, சோம் சேகர், சுரேஷ் ஆகிய ஐந்து பேரில் இருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில், இன்று வெளியான புரோமோவில் வேல்முருகனை தவிர்த்து அனைவரும் வீட்டில் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் வேல்முருகன் எலிமினேட் ஆனது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*