பாலா படத்திற்கு உதவிய சூர்யா.!!!!
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் பாலா, தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில் இவர் அடுத்ததாக மலையாளத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘ஜோசப்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரித்துள்ளார்.
விசித்திரன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஆர்கே. சுரேஷ், பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். பத்மகுமார் இயக்கி உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விசித்திரன் பட போஸ்டர்
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புத்தாண்டு தினமான இன்று விசித்திரன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா இப்படத்தின் டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உதவியுள்ளார்.