By February 28, 20210 CommentsReport

நீண்ட நாட்களுக்கு பின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ‘காடன்’ படக்குழு..!!

பிரபு சாலமன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘காடன்’. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ராணா, விஷ்ணு விஷால் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். நாயகியாக ஜோயா நடித்துள்ளார்.

3 இடியட்ஸ் படத்தின் இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ரா இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராகவும், ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி ஒலி அமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர். இப்படம் வருகிற மார்ச் 26-ந் தேதி ரிலீசாக உள்ளது.

ராணா

இந்நிலையில், காடன் படக்குழு டிரெய்லர் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். யானையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளதால், உலக வனவிலங்கு தினமான, வருகிற மார்ச் 3-ந் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*