கை எலும்பு முறிந்த நிலையிலும் விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஜெனிலியா! இணையத்தில் தீயாய் பரவும் காணொளி
நடிகை ஜெனிலியா அவரின் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அவர் அண்மையில் தமது குழந்தைகளுக்காக ஸ்கேட்டிங் கற்றுக் கொண்டிருந்தபோது அதை வீடியோவாக பதிவு செய்ய நினைத்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் ஸ்கேட்டிங் செய்யும்போது நிலை தடுமாறி கிழே விழுந்துவிட்டார்.
இதனால் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை அறிந்ததும் ரசிர்கள் மிகவும் வருத்தப்பட்டுள்ளனர்.
ஆனாலும் வலியை பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஜெனி, அதே சிரிப்புடன், ‘இந்த சக்ஸஸ் ஸ்டோரி இப்போதைக்கு தோல்வி அடைந்துவிட்டது.
எனினும் தொடர்ந்து ஸ்கேட்டிங் பண்ணுவேன்’ என அந்த வீடியோவை பதிவிட்டிருந்தார். ஆனால் இந்த நிலையிலும் தற்போது விஜயின் மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு தம் நண்பர்கள் புடைசூழ குத்தாட்டம் போட்டு ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளார்.
View this post on Instagram