பெண்கள் ஜீன்ஸ் அணிவதை எதிர்ப்பீர்களா? முதல்வரிடம் கொந்தளித்த நடிகர் சத்யராஜ் மகள்!
உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரத் சிங் ராவத், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, நான் விமானத்தில் பயணித்தபோது ஒரு குழந்தையை கையில் வைத்திருந்த பெண், கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருத்தார். இது மோசமான முன்மாதிரி எனத் தெரிவித்தார்.
இவர், கூறிய கருத்திற்கு பல எதிர்ப்புகள் எழுந்தாலும், தற்போது இதை விமர்சித்து நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் ஷார்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் போட்டு புகைப்படம் பதிவிடுவதை எதிர்த்துப் பலரும் அறிவுரை கூறினர்.
ஆனால், ஒரு அரசியல்வாதியாக இருந்தால் காட்டன் புடவையில் தான் இருக்க வேண்டுமா? உத்தரகாண்ட் முதல்வரின் பேச்சை ஒரு பெரியாரிஸ்டாக நான் எதிர்க்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் இவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.