By March 22, 20210 CommentsReport

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் திடீர் அனுமதி… நள்ளிரவில் நடந்தது என்ன?

நடிகர் கார்த்திக்கு ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரும், நடிகருமான கார்த்திக் நேற்று இரவு மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். அதற்கான தேர்தல் பணிகளில் நேற்றிரவு ஈடுபட்டுக் கொண்டிந்தார்.

அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் கார்த்திக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 


Post a Comment

CAPTCHA
Refresh

*