By March 23, 20210 CommentsReport

குக் வித் கோமாளி 2 வெற்றியாளர் யார் தெரியுமா? வெளியே கசிந்த தகவல்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவி தொலைக்காட்சியில், தற்போது டிஆர்பியில் கலக்கி கொண்டிருக்கும் ஒரு ஷோ என்றால் அது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். இதையடுத்து இந்த சீசன் நிறைவடைய இறுதி வாரத்தை எட்டியுள்ளது.

ஏற்கனவே, இறுதி சுற்றுக்கு முதல் நபராக கனி தேர்வு செய்யப்பட்டு, அதன் பின்னர் அஸ்வின், பாபா பாஸ்கர் ஆகியோரும் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகினர்.

எனவே, இந்த சீசனில் வெற்றியாளர் யார் என்ற செய்தி தற்போது ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

அதில், குக் வித் கோமாளி சீசன் 2ல் வெற்றியாளர் பாபா பாஸ்கர் அல்லது அஸ்வின் ஆகியோர் இருவரில் ஒருவர்தான் என்ற செய்தி தற்போது வெளியாகி உள்ளது.

மேலும், இவர்கள் இருவருக்கும் கடும் போட்டியே நிலவுகிறது. அனைவரையும் ரசிக்க வைக்கும் பாபா பாஸ்கரும், பல கஷ்டங்களை தாண்டி இந்த இடத்தில் நின்று ரசிகர்களை கவர்ந்த அஷ்வினுக்கும் ரசிகர்களின் ஆதரவு குவிந்து வருகிறது.

இருப்பினும் இன்னும் ஒரு சில வாரத்தில் யார் வெற்றியாளர் என்பது தெரிந்துவிடும் ஆகையால் அதனை பொறுத்திருந்து பார்ப்போம்.


Post a Comment

CAPTCHA
Refresh

*