அட நடிகை அனுஷ்காவின் அண்ணன்களா இவர்கள்?.. இணையத்தில் ட்ரெண்டாகும் வைரல் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அனுஷ்கா. அதனைத் தொடர்ந்து அவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், இடையில் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடை அதிகரித்திருந்த அவர் யோகா, ஆயுர்வேத சிகிச்சை மூலம் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு உடல் எடையை குறைத்தார்.
மேலும், நடிகை அனுஷ்காவின் புகைப்படங்கள் அவ்வபோது சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம்.
இதனிடையே, சமீபகாலமாக நடிகை அனுஷ்காவுக்கு இருவர் முத்தமிடுவது போன்ற புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
அவர்கள் நடிகை அனுஷ்காவின் அண்ணன்களாம். அவர்களில் ஒரு அண்ணனான குனரஞ்சன் ஷெட்டி அரசியலில் உள்ளாராம். மற்றொரு அண்ணனான சாய் ரமேஷ் ஷெட்டி காஸ்மெட்டிக் சர்ஜனாக இருக்கிறாராம்.