சீரியலில் களமிறங்கிய பிக்பாஸ் அர்ச்சனா… எந்த சீரியல்னு தெரியுமா?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி, பாரதிகண்ணம்மா சிறப்பு ஒளிபரப்பில் தொகுப்பாளினி அர்ச்சனா நடித்துள்ளார்.
ராஜா ராணி சீரியல் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற “என் கணவன் என் தோழன்” என்ற சீரியலின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இதில் சரவணன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்து.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அர்ச்சனா முதன்முறையாக பிரபல ரிவியல் ஒளிபரப்பான ‘காதலே காதலே’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்பு சில சிறப்பு நிகழ்ச்சியினையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்நிலையில் தற்போது ராஜா ராணி சீரியல் மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் இணையும் மகாசங்கமம் நடைபெற்று வருகிறது. இந்த சீரியலின் ஒரு பகுதியாக அர்ச்சனா இந்த சீரியலில் இடம் பெற்றுள்ளார். இந்த புரோமோவை பிரபல ரிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.