ஆல்யா வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம்… சஞ்சீவ் அளித்த சர்ப்ரைஸ்! தீயாய் பரவும் காட்சி
ஆல்யா, சஞ்சீவ் தனது மகள் ஐலாவின் பிறந்தநாளைக் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில், ஜோடியாக நடித்து பின்பு ரியல் ஜோடியாக மாறி திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.
பெரும் ரசிகர் பட்டாளத்தினை வைத்துள்ள இவர்கள் திருமணத்திற்கு பின்பு ஒரு பெண்குழந்தையினை ஆல்யா பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு ஐலா சையத் என பெயரும் சூட்டினார்கள்.
அவ்வப்போது தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆல்யா தனது குழந்தை ஐலாவின் பிறந்தநாளை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர்.
மகளின் பிறந்தநாளுக்கு சஞ்சீவ் விலையுயர்ந்த மினி கூப்பர் கார் ஒன்றினை பரிசாக வழங்கி மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
View this post on Instagram