ஹீரோவாக களமிறங்கும் பிரபல காமெடி நடிகர்! அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்… ஒரே குஷியில் ரசிகர்கள்
நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போதுள்ள தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நாயகர்கள் வரிசையில் ஒருவராக திகழ்பவர் சதீஷ்.
கோலிவுட்டில் பிசியான நடிகராக இருக்கும் சதிஷுக்கும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை உருவாகி உள்ளது.
இந்நிலையில் பல சூப்பர்ஹிட் படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க சதீஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் இன்னொரு படத்திலும் ஹீரோவாக நடிக்க சதீஷ் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் உலா வருகின்றன.
இதனால் ஒரே நேரத்தில் சதீஷ் இரண்டு படங்களில் ஹிரோவாக நடிக்கிறார் என்ற செய்தி கோலிவுட்டில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இந்த படங்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.