நீங்கள் கடவுளின் குழந்தை.. மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் சகோதரி நெஞ்சை உருக்கும் பதிவு!
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.
இந்த நிலையில், சுஷாந்த் சிங்கின் சகோதரி ஸ்வேதா சிங் பதிவிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்களிடையே பரவி வருகிறது.
அவர் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் இணைத்த புகைப்படத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை நினைவுகூறும் வகையில் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெஞ்சில் அவரது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், “சுஷாந்த்சிங் ராஜ்புத், நடிகர், தீவிர வானியலாளர், சுற்றுச்சூழல் ஆய்வாளர், மனிதாபிமானி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவரது பதிவில், “சுஷாந்த் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரின் பெயர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதுதான் தூய ஆன்மாவின் தாக்கம்.
நீங்கள் கடவுளின் குழந்தை, எனது குழந்தையே. நீங்கள் எப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப்பதிவு தற்போது சுஷாந்த் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram