By March 25, 20210 CommentsReport

கோடிக்கணக்கில் கடன்.. வீட்டையே விற்கும் அவல நிலை!.. கதறும் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் கஞ்சா கருப்பு. இவர் பிதாமகன் படத்தில் அறிமுகமாகி பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

 

இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல விமர்சனங்களை பெற்றாலும், அதன் பின் பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் திணறி வருகிறார்.

 

இந்த நிலையில், கஞ்சா கருப்பு சொந்த காசில் தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

 

அதில், கடந்த 2014-ம் ஆண்டு கஞ்சா கருப்பு ‘வேல்முருகன் போர்வெல்’ என்ற படத்தை தயாரித்தாராம். அந்தப் படம் அட்டர் ப்ளாப் ஆகி கஞ்சா கருப்பை நடுத்தெருவில் நிறுத்திவிட்டதாம்.

 

அப்போதே பாலா மற்றும் அமீர் தயாரிப்பு வேண்டாமென்று சொன்னதோடு, கஞ்சா கருப்பை நடிப்பை மட்டும் பார்க்க சொல்லி எவ்வளவோ வற்புறுத்தியும் வந்தார்களாம்.

 

 

 

ஆனால், அதை கஞ்சாகருப்பு காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லையாம். அதைக் கேட்காமல் கோபி என்ற டைரக்டரை நம்பி ஏமாந்து விட்டதாக கஞ்சா கருப்பு பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

 

மேலும், அந்தப் படத்தால் அவருக்கு 4 கோடி ரூபாய் தனக்கு நஷ்டம் ஆகி விட்டது என்றும், இதனால் தனது சொந்த வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், இனிமேல் சொந்தமாக படம் எடுக்க வாய்ப்பே இல்லை என்றும் ஆவேசமாக கூறியிருக்கிறார். இந்த தகவல் இணைய ஊடகங்களில் பரவி வருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*