ரஜினியை சந்தித்த சரவணன்! சந்திப்பின் பின்னணி இதுதான்….இணையத்தில் லீக்கான புகைப்படங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், Legend சரவணனும் சந்தித்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் ரஜினிகாந்தும், Legend சரவணனும் தங்களது படப்பிடிப்புகளின் இடைவெளியில் சந்தித்து பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துவரும் அண்ணாத்தே படப்பிடிப்பு சென்னையில் நடந்துவருகிறது. அதே போல சரவணனின் படப்பிடிப்புகளும் சென்னையில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.