பிரபல முன்னணி சீரியலில் களமிறங்கிய குக் வித் கோமாளி பிரபலம்.. ட்ரெண்டாகும் செல்ஃபி புகைப்படம்!
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் இரண்டு சீரியல்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவை ஒன்று பாரதி கண்ணம்மா அடுத்து ராஜா ராணி 2.
இந்த இரண்டும் சீரியல்களும் நல்ல வரவேற்பை பெறும் நிலையில், இதில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் பற்றி தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளன.
ஆம், இதில் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரியோ, சம்யுக்தா மற்றும் சோம் சேகர் ஆகியோர் பங்கேற்றிருந்த நிலையில், தற்போது ஸ்பெஷல் கெஸ்ட்டாக பாலா, ஷிவாங்கி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
மேலும், இவர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துகொண்ட செல்பி புகைப்படமும் வைரலாக பரவி வருகிறது.