By March 26, 20210 CommentsReport

அந்த நடிகரை தொடர்ந்து மாதவனுக்கு ஏற்பட்ட பிரச்சினை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் ஓரளவிற்கு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது அலையாக பெருமளவில் பரவ துவங்கியுள்ளது.

 

மேலும், இந்தியாவில் ஒரு நாளைக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

 

இந்நிலையில், அண்மையில் பாலிவுட் நடிகர் அமீர் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து தற்போது சினிமா துறையில் முன்னணி நடிகராக இருக்கும் மாதவனுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

 

இதுகுறித்து, பேசிய மாதவன் அந்த பதிவில் அவர், ஃபர்ஹான் ராஞ்சோவைப் பின்தொடர வேண்டும், வைரஸ் எப்போதுமே எங்களுக்குப் பின்னால்தான் இருக்கிறது.

 

ஆனால், இந்த முறை பிடிபட்டுவிட்டது. ஆல் இஸ் வெல். இந்த இடத்தில் ராஜு மட்டும் இருக்க வேண்டாம் என நினைக்கிறோம். உங்கள் அத்தனை அன்புக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*