By March 26, 20210 CommentsReport

வனிதாவிற்கு போட்டியாக நடிப்பில் களமிறங்கிய தங்கை ஸ்ரீதேவி

தமிழ் சினிமாவில் ரிக்‌ஷா மாமா திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீதேவி.

 

பிரபல முன்னணி நடிகரான விஜயகுமாரின் மகளான இவர் தெலுங்கில் ஈஸ்வர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

 

அதனைத் தொடர்ந்து நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளிவந்த தித்திக்குதே படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அனைத்து ரசிகர்களின் மனதையும் பெருமளவில் கவர்ந்தார்.

 

அதனைத் தொடர்ந்து அவர் தனுஷ் நடிப்பில் வெளியான தேவதையை கண்டேன், பிரியமானவளே,காதல் வைரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

 

இந்த நிலையில் அவர் கடந்த 2009ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டதுடன், இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

 

சினிமாவிலிருந்து விலகி குடும்பத்தினை கவனித்த நடிகை ஸ்ரீதேவி தற்போது ரிவி நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கியுள்ளார்.

 

ஆம் தெலுங்கு StarMaa தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Comedy Stars என்ற நிகழ்ச்சியின் நடுவராக ஸ்ரீதேவி களமிறங்கியுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தினை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*