ஆசை கணவருடன் முதன் முறை ஹோலி! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம்
நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் முதல் ஹோலி பண்டிகையை கொண்டாடி உள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெற்றி நாயகியாக வலம் வந்தவர் காஜல் அகர்வால்.
இவர், கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, ஆச்சார்யா, ஹேய் சனாமிகா போன்ற பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரியலில் நடித்தார்.
ஹாரர் கதைகளத்தைக் கொண்டு வெளிவந்துள்ள இந்தவெப் தொடர் 7 எபிஸோடுகளை கொண்டுள்ளது.
இந்நிலையில் இப்பொழுது காஜல் அகர்வால் தனது காதல் கணவருடன் முதல் ஹோலி பண்டியை கொண்டாடி உள்ளார். அந்த கலர்புல்லான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த காஜல் அகர்வால் வண்ணமயமான இந்த ஹோலி,அன்பு, நேர்மையான எண்ணம், நல்ல ஆரோக்கியத்தை தரும் என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram