By March 31, 20210 CommentsReport

திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நடிகர் விஷ்ணு விஷால்.. குவியும் வாழ்த்துக்கள்

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் விஷ்ணு விஷால்.

 

அதன் பின்னர் பல படங்களில் நடித்தாலும், ராட்சசன் படம் தான் இவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது.

 

இதையடுத்து, சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார்.

 

பின் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்தார். கடந்தாண்டு இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

 

இந்த நிலையில், ஜுவாலா கட்டாவுடன் திருமணம் எப்போது என்பது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.

 

அதில், வருகிற ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*