எல்லோரும் மறக்காம வந்திருங்க… நடிகர் மாதவன் வெளியிட்ட வீடியோ.. ஆச்சரியமடைந்த ரசிகர்கள்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதியில் நடைப்பெற உள்ளது. இதற்காக அரசியல்வாதிகள் தீவிரமாக பிரச்சரத்தை நடத்தி வருகின்றனர்.
மேலும் மக்களுக்கும் தொடர்ந்து தேர்தலில் ஓட்டு போடுவது குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நடிகர் மாதவன் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், உங்க வீட்டு பக்கத்தில்தான். வந்து நல்லபடியாக ஓட்டு போட்டுட்டு போங்க. என்னடா கல்யாணத்துக்கு அழைக்கிற மாதிரி அழைக்கிறேன் என்று பார்க்கிறீர்களா?
இது நம் நாட்டோட கல்யாணம் தாங்க. அதில் முக்கிய சிறப்பு விருந்தினரே நீங்கதான். அதனால் மறக்காமல் வந்துடுங்க.
ஞாபகம் இருக்குல்ல ஏப்ரல் 6-ந்தேதி. 100 சதவீதம் வந்துடுங்க என கூறியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram