By April 1, 20210 CommentsReport

விபத்தில் சிக்கிய பிரபல வில்லன் நடிகர்.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகர் ஆதித்யா மேனன்.

 

தற்போது, இவர் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடித்து வரும் ஹரி ஹரா வீர மல்லு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

 

இந்நிலையில், இப்படத்தின் குதிரையில் இருந்தபடி சண்டை செய்த ஆக்ஷன் காட்சியில், ஆதித்யா மேனன், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

 

உடனே, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த விபத்து நடந்து 4 நாட்கள் ஆகும் நிலையில் தற்போது இந்த தகவல் வெளியே கசிந்துள்ளது.

 

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் பலர் விரைவில் அவர் குணமடைய வேண்டும் என தெரிவித்து வருகிறார்கள்..


Post a Comment

CAPTCHA
Refresh

*