By April 2, 20210 CommentsReport

என் கணவரிடம் கேளுங்கள் அதை செய்கிறேன்.. ரசிகரின் கேள்விக்கு பிரியா மணி கொடுத்த பதில்!

தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா மணி. இப்படத்தின் வெற்றிக்கு பின் நிறைய படங்களில் நடித்திருந்தார். தேசிய விருதை பெற்றார்.

 

இதையடுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா என்பவரை திருமணம் செய்திருந்தார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ப்ரியாமணி.

 

இந்நிலையில், சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

 

அதில், என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்க அதற்கு பதில் அளித்த பிரியாமணி, எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை,

 

ஆனால் என் கணவரிடம் அனுமதி கேளுங்கள், அவர் சம்மதம் தெரிவித்தால் நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*