நிர்வாண புகைப்படம் கேட்ட நபர்: சரியான பதிலடி கொடுத்த பிரபல நடிகை பிரியாமணி
தன்னிடம் நிர்வாண புகைப்படம் கேட்ட நபருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் நடிகை பிரியாமணி.
கண்களால் கைது செய் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியா மணி, இவர் நடித்த பிரியாமணி படம் சூப்பர் ஹிட்டானது.
இப்படத்துக்காக தேசிய விருதையும் தட்டிச்சென்றார், தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்த பிரியாமணி, திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு விலகினார்.
தற்போது தமிழில் ‘கொட்டேஷன் கேங்க்’ படத்திலும் தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடிக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பிரியாமணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டார்.
அதற்கு நிறைய வரவேற்பும், விமர்சனங்களும் கிளம்பின, இதைப் பார்த்த ரசிகர் ஒருவர், நிர்வாண புகைப்படங்களை வெளியிடுங்கள் என்றார்.
இதனால் கோபமான பிரியாமணி முதலில் உனது தாய், சகோதரியிடம் இதை கேள், அதன்பிறகு நானும் பதிவிடுகிறேன் என்று பதிலளித்தார். பிரியாமணியின் பதில் வைரலாகி வருவதுடன், சரியான பதிலடி மேடம் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.