சிங்கத் தமிழனாக சீரியலில் களமிறங்கிய பிக்பாஸ் ஆரி… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்
பிரபல ரிவியில் இரண்டு சீரியல்கள் கலந்து மெகா சங்கமமாக இணைந்துள்ள நிகழ்ச்சியில் பிக்பாஸ் ஆரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. அதிலும் ராஜா ராணி, பாரதி கண்ணம்மா இவை இரண்டிற்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம்.
இந்நிலையில் பிரபல ரிவி இந்த இரு சீரியல்களுக்கு சூப்பர் குடும்பம் என்ற போட்டியினை சீரியலில் நடத்தி வருகின்றது.
இதில் பல கட்டங்கள் முடிவடைந்த நிலையில், இதில் வெற்றி பெறுபவர் கண்ணம்மாவா, ஆல்யாவா என்ற கேள்வி அதிகமாக எழுந்தது.
மேலும் இதில் ஆல்யா வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பரிசுத்தொகையையும், விருதினையும் பிக்பாஸ் ஆரி சீரியலில் எண்ட்ரியாகி கொடுத்துள்ளார்.