By April 3, 20210 CommentsReport

சரத்குமார்-நயன்தாரா நடித்த ஐயா படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- இதுவரை வெளிவராத தகவல்

தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகை நயன்தாராவை முதலில் அடையாளம் கண்டது ஐயா என்கிற திரைப்படத்தின் மூலம் தான்.

 

சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்த இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெரிய ஹிட்டடித்தது. இப்படத்தில் சரத்குமாரின் ஐயாத்துரை கதாபாத்திரம் செம பிரபலம் ஆனது.

 

ஆனால் முதலில் இப்படத்தின் கதையை ஹரி கமல்ஹாசனை நினைத்து தான் எழுதினாராம்.

 

பின் தயாரிப்பாளர் ஞானவேல் மற்றும் இயக்குனர் ஹரி இருவரும் கதையை கமல்ஹாசனிடம் கூற அவரும் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

 

கதை விவாதத்தில் சில மாற்றங்கள் கூறியுள்ளார். அது இயக்குனருக்கு செட் ஆகாமல் போக பின் படத்தில் இருந்து கமல்ஹாசன் விலகியுள்ளார்.

 

அதன்பிறகே கதை சரத்குமார் கைக்கு சென்றுள்ளது, படம் வெற்றியும் கண்டது.


Post a Comment

CAPTCHA
Refresh

*