ரசிகர்களை படாத பாடுபடுத்திய பிரபல ரிவி சீரியல்…. முடிவுக்கு வந்ததால் உச்சக்கட்ட மகிழ்ச்சி
பிரபல ரிவியான விஜய்யில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்களை பெரிதும் கவர்ந்து வருவதுடன் தற்போதும் தனது முதல் இடத்தினை தக்க வைத்துக்கொண்டே இருக்கின்றது.
அந்த வகையில் சற்றே வித்யாசமான நாடகமாக இருக்க வேண்டும் என்பதால் காற்றின் மொழி என்ற சீரியல்களை ஒளிபரப்பி வந்தது.
இந்த சீரியலில் ஹீரோயின் ஊமையாக இருக்கிறார் அவரை எப்படி முழு மனதுடன் ஹீரோ ஏற்றுக் கொள்கிறார் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சீரியலில் ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான சஞ்சீவ் மற்றும் இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது.
ஆனால் நாட்கள் செல்ல ஒரே கதையை மையமாக வைத்து ஒளிபரப்பப்பட்டதால் ரசிகர்கள் இதனை சற்று வெறுக்க ஆரம்பித்ததுடன் நாடகத்தினை ஒளிபரப்பாதீர்கள் என்றும் கூறிவந்தனர்.
அந்த வகையில் தற்போது இந்த நாடகம் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனவே ரசிகர்கள் நாங்கள் சொன்னது உங்களது காதில் விழுந்துடுச்சா என்று மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.