பிரபல நடிகை சித்ராவுக்கு மக்களின் உயரிய விருது: கண்கலங்கிய ரசிகர்கள்
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவிற்கு மக்களின் நாயகி என்று விருது வழங்கியுள்ள நிலையில், அதை வாங்குவதற்கு அவர் இல்லையே என்ற சோகம் மக்கள் மத்தியில் அதிகமாக நிலவி வருகின்றது.
கடந்த வருடம் டிசம்பர் 9ம் திகதி பிரபல தனியார் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார் நடிகை சித்ரா. இவருடன் இவரது கணவர் ஹேம்நாத் இருந்துள்ளார்.
இவரைத் தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இவரது மரணத்திற்கு சரியான காரணம் எதுவும் வெளிவராத நிலையில், இவரது புகைப்படங்கள் காணொளிகள் என வெளியிட்டு ரசிகர்கள் தங்களது சோகத்தினை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சித்ராவிற்கு பிரபல ரிவி விருது ஒன்றினை வழங்கியுள்ளது. ஆம் மறைந்த நடிகை சித்ரா மக்களின் நாயகி என்ற விருதினை வழங்கி அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளனர்.
மறைந்த பின்பும் மக்களின் நாயகியாக வலம்வரும் சித்ரா இந்த விருதினை வாங்குவதற்கு தற்போது உயிரோடு இல்லையே என்று ரசிகர்கள் கவலையுடன் காணப்படுகின்றனர்.