By April 5, 20210 CommentsReport

இலங்கை பெண் கொடுத்த புகார்… ஆர்யாவிற்கும், சயீஷாவிற்கும் இடையே பிரச்சினையா? வெளியான உண்மை

ஆர்யா தன்னை ஏமாற்றினார் என்று இலங்கை பெண் கொடுத்த புகாரின் பெயரில் ஏற்பட்ட சர்ச்சையால் ஆர்யாவிற்கும், சயீஷாவிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஆர்யா தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி ரூ. 70 லட்சம் மோசடி செய்துவிட்டதாக ஜெர்மனியில் வேலை பார்க்கும் இலங்கையை சேர்ந்த விட்ஜா என்கிற பெண் புகார் அளித்தார்.

 

அவர் தன் புகாரில் கூறியிருந்ததாவது, நான் ஜெர்மனியில் வேலை செய்து வருகிறேன். நானும், ஆர்யாவும் மூன்று ஆண்டுகளாக காதலித்தோம். என்னை நிச்சயம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார். என்னிடம் இருந்து ரூ. 70 லட்சம் வாங்கியிருக்கிறார் ஆர்யா.

 

பின்னர் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். என்னிம் இருந்து வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு நான் அவரிடம் கேட்டேன். கொரோனா வைரஸ் பிரச்சனையால் பட வாய்ப்புகள் இல்லாமல் நானே நெருக்கடியில் இருக்கிறேன் என்று கூறி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

 

பண விஷயம் குறித்து கேட்டபோது ஆர்யாவின் அம்மா என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். ஆர்யாவுக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் அனைத்தும் என்னிடம் இருக்கிறது.

 

பணத்தை திருப்பிக் கொடுக்காவிட்டால் புகார் அளிப்பேன் என்றேன். அதற்கு அவரோ, புகார் கொடுத்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார் என்றார்.

 

விட்ஜாவின் புகார் குறித்து ஆர்யா விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. இந்நிலையில் மோசடி விவகாரம் தொடர்பாக ஆர்யாவுக்கும், மனைவி சயீஷாவுக்கும் இடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக பேச்சு கிளம்பியது.

 

இந்நிலையில் தன் மனைவி புனித் ராஜ்குமாருடன் சேர்ந்து நடித்துள்ள யுவரத்னா கன்னட படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளதை முன்னிட்டு ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார் ஆர்யா. அதை பார்த்த சயீஷா நன்றி தெரிவித்துள்ளார்.

 

ஆர்யா, சயீஷாவின் ட்வீட்டுகளை பார்த்த ரசிகர்களோ, இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை. ஒற்றுமையாக வாழும் கணவன், மனைவியை பிரிக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

 

முன்னதாக சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சயீஷா ஜோடியாக நடித்த டெடி படம் ஓடிடியில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. குட்டீஸ்கள் கொண்டாடும் படமாக டெடி அமைந்துவிட்டது.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*