By April 6, 20210 CommentsReport

டான்ஸ் ஆடி பிரச்சாரம் செய்த சுஹாசினி! கமலின் அறிவிப்பால் கதறிய ரசிகர்கள்…. மகள் போட்ட குத்தாட்டம்

அரசியலுக்கு சினிமா தடையாக இருந்தால் நடிப்பை நிறுத்தப்படும் என்று உலக நாயகன் கமல் ஹாசன் இன்று கோவையில் கூறியது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை துவங்கி நடத்தி வரும் கமல் ஹாசன் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். கோவையில் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின.

 

அவரின் கால் வீங்கியதால் பிரச்சார வாகனத்தில் ஒற்றைக் காலில் நின்ற புகைப்படம் வெளியாகி பலரையும் ஃபீல் பண்ண வைத்தது. கமலுக்காக அவரின் இளைய மகள் அக்ஷராவும், சுஹாசினி மணிரத்னமும் பிராச்சாரம் செய்துள்ளனர்.

 

பிரச்சாரத்தின்போது அக்ஷராவும், சுஹாசினியும் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*