இயக்குநர்களை கதறவிட்ட சிம்புவா இது ? மண் தரையில் படுத்து தூங்கிய அரிய புகைப்படம்… ஷாக்கில் ரசிகர்கள்
மாநாடு படப்பிடிப்புக்கு இடையே சிம்பு மண் தரையில் படுத்து ஓய்வு எடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு அவரின் குணத்தை பாராட்டியுள்ளார் வெங்கட் பிரபு.
கொரோனா வைரஸ் பிரச்சனை எல்லாம் ஏற்படுவதற்கு முன்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார் சிம்பு. அந்த படத்திற்காக தான் வெளிநாட்டுக்கு சென்று தன் உடல் எடையை குறைத்துவிட்டு வந்தார். ஆனால் கொரோனா பிரச்சனையால் படப்பிடிப்பு பல மாதங்களாக பாதிக்கப்பட்டது.
அந்த நேரத்தை பயன்படுத்தி தன் உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து ஒல்லிக்குச்சியானார் சிம்பு. மாநாடு படப்பிடிப்பு பல மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் துவங்கியது. இதற்கிடையே சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்தார் சிம்பு.
Actors life!!! Man of simplicity!!! #nightshoot#Maanaadu in between shots!! @SilambarasanTR_@iam_SJSuryah#candidshotpic.twitter.com/rCtrpD97cV
— venkat prabhu (@vp_offl) April 3, 2021