பீட்டர் பாலை பிரிந்த பிறகு தான் நல்ல காலம் பிறந்திருக்கிறது! இந்த தேர்தலில் வனிதாவின் ஆதரவு யாருக்கு?
2
நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் வனிதா விஜயகுமார் யாரை ஆதரிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள சமூக வலைதளவாசிகள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
வனிதாக்கா ஓட்டு யாருக்கா இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தலைமையிலான மூன்றாவது அணி களத்தில் உள்ளது. அதிமுக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்திருக்கின்றன.
அடுத்து ஆட்சிக்கு வரப் போவது அதிமுக, பாஜக கூட்டணியா இல்லை திமுகவா இல்லை கமலா என்று மக்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தேர்தலில் உங்களின் வாக்குகளை விற்றுவிடாமல் சிந்தித்து செயல்படுங்கள் என்று திரையுலகை சேர்ந்த சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வனிதா விஜயகுமார் யாரை ஆதரிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிர்கள் ஆவலாக இருக்கிறார்கள். அக்கா, உங்கள் ஓட்டு யாருக்கு என்று சிலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வனிதா பாவம் அவர் வேலை உண்டு, பிள்ளைகள் உண்டு என்று இருக்கிறார். அவரை அரசியலில் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டாம் என்று சிலர் தெரிவித்துள்ளனர். வனிதா ட்விட்டர் பக்கம் வந்தே 3 நாட்கள் ஆகிறது.
கெரியரை பொறுத்தவரை அவர் கையில் 4 படங்கள் இருக்கிறது. ஆதம் தாசன் இயக்கத்தில் அனல் காற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். நடமாடும் நகைக்கடையான ஹரி நாடார் ஜோடியாக 2கே அழகானது காதல் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்து வரும் அந்தகன் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் வனிதா. இது தவிர்த்து வசந்தபாலன் இயக்கத்தில் கைதி, மாஸ்டர் படங்கள் புகழ் அர்ஜுன் தாஸ் நடித்து வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
வனிதா இப்படி அடுத்தடுத்து புதுப்படங்களில் ஒப்பந்தமாவதை பார்த்து அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். பீட்டர் பாலை பிரிந்த பிறகு தான் வனிதா அக்காவுக்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது என்று ரசிகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.