By April 7, 20210 CommentsReport

சர்ச்சைக்கு மத்தியில் தலையுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்! அஜித்தின் லுக்க மட்டும் பாருங்க

வாக்கு செலுத்த வந்த இடத்தில் செல்பி எடுத்த ரசிகர்களின் செல்போனை அஜித் பிடுங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

இப்படி ஒரு நிலையில் அஜித்துக்கு பின்னால் இருந்து ரசிகர் ஒருவர் எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் படு மும்மரமாக நடைபெற்று முடிந்தது.

 

தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.

 

நடிகர் விஜய் 500 மீட்டர் சைக்கிளில் பயணம் செய்து வாக்கு சாவடிக்கு சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் பேசும் பொருளானது.

 

சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித்குமாரும் அவரது மனைவி ஷாலினியும் வாக்கு பதிவு துவங்கும் முன்னரே வந்து காத்துக்கொண்டு இருந்தனர்.

 

அஜித்தை பார்த்த ரசிகர்கள் தல தல என்று கோஷம் போட்டு அவரை சுற்றி நின்று கொண்டனர். கொரோனா அச்சம் இருக்கும் தன்னை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் கொஞ்சம் டென்சன் ஆனார் தல.

 

அப்போது ரசிகர் ஒருவர், தனது செல்போனில் செல்பி எடுக்க தனது முகத்திற்கு முன்னாள் செல்போனை நீட்ட கடுப்பான அஜித், அந்த நபரின் செல்போனை புடுங்கி, தனது பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டார்.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*