By April 9, 20210 CommentsReport

மீண்டும் நடுவராக வேறு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தாவிய வெங்கடேஷ் பட்; குவியும் வாழ்த்து.. வைரலாகும் வீடியோ

விஜய் டிவி ஹிட் அடித்துக்கொண்டிருந்த குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி தற்போது இறுதி வாரத்தை எட்டியுள்ளது.

 

முதல் சீசனின் வெற்றியை அடுத்து, இரண்டாவது சீசன் இறுதி வாரம் நிகழ்ச்சி ஏப்ரல் 14-ஆம் தேதி புத்தாண்டு அன்று மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

 

இந்நிலையில், இதில் நடுவர்களாக வரும் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவருமே போட்டியாளர்களிடம் ரகளைகள் செய்து செம ஜாலியாக இருந்து வந்தனர்.

 

தற்போது, தமிழில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைவதை தொடர்ந்து செஃப் வெங்கடேஷ் பட் கன்னடத்தில் குக் வித் கிறுக்கு என்ற பெயரில் ரீமேக்காகும் நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொள்ள உள்ளாராம்.

 

மேலும், இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த நிலையில் ரசிகர்கள் பலரும் உற்சாகத்துடன் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by venkatesh bhat (@chefvenkateshbhat)


Post a Comment

CAPTCHA
Refresh

*